Pages

Tuesday, July 1, 2014

கர்ப்பிணி பெண்கள் , பாலுட்டும் தாய்மார்கள் மீது நோன்பு கடமையா???????

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh64R6xGNdA7Fq845K68ZEscgHueElUAJdI0RiJd_YNCnCFjvW8d7FBhUmLoNUdFY1svkoYaCxxxaqO-1NF0-6WMfMF82xl0fVLvaWTSt5VjqThsQLc89g5xYU8yvzVxRaMizqzeteLkS0/s1600/10462648_734630329928795_7977467123058711636_n.jpgஅன்சார்(தப்லீகி)
இவ்விருவர் பற்றியும் நபிகளார் கூறிய தகவலை நாம் முதலில் பார்க்க வேண்டும்
நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் கூறினார்கள்
நிச்சியமாக அல்லாஹ் பிரயாணியை விட்டும் தொழுகையின் அரைவாசியையும் மேலும் பிரயாணி கற்பமூர்றவர். பாலூட்டுகின்றவர் ஆகியோரை விட்டும் நோன்பையும் நீக்கி உள்ளான்
{முஸ்னத் அஹமத்/நஸாயி}
இந்த ஹதீஸ் இவ்விருவரும் நோன்பை விடலாம் என்பதற்கான ஆதாரமாகும் என்றாலும் இவர்கள் விட்ட நோன்பை கலா செய்ய வேண்டுமா? என்று நபிகளாரை தொட்டும் எந்த தகவலும் வரவில்லை
ஆனால் சில அறிஞ்சர்கள் இவ்விருவரும் விட்ட நோன்பை கலா செய்ய வேண்டும் என்று கூறுகின்றார்கள் அதற்கான அவர்களின் வாதங்களை நாம் இங்கே பாப்போம்
அல்லாஹ் கூறுகின்றான்
""உங்களில் யார் நோயாளியாக அல்லது பிராணியாக இருக்கின்றாரோ அவர் வேறு நாட்களில் நோன்பு பிடித்துக்கொள்ளட்டும்
{அல் குர்ஆன்2:184}
மேலே நான் குறிப்பிட்ட வசனத்தில் அல்லாஹ் பிரயாணி நோன்பை வேறு நாட்களில் பிடிக்குமாறு கூறி இருப்பதால் அதை ஒத்து கியாஸ் முறைப்படி இவ்விருவரும் கலா செய்ய வேண்டும் என்று வாதிடுகின்றனர்
அதற்கான இன்னுமொரு காரணம் மேலே நான் குறிப்பிட்ட ஹதீஸில் நபிகளார் பிரயாணி . கற்பமூர்றவர்.பாலூட்டுகின்றவர். என மூன்று போரையும் இணைத்து கூறி இருப்பதால் பிராணியை வேறு நாட்களில் நோன்பு பிடிக்குமாறு அல்லாஹ் கூறுவதால் இவ்விருவருக்கும் அதே சட்டம் தான் பொருந்தும் என்று வாதம் வைக்கப்படுகின்றது
ஆனால் இது தவறான வாதமாகும் நபிகளார் நோன்பை விடுகின்ற சந்தர்பத்தில் இவ்விருவரையும் பிரயாநியுடன் இணைத்து கூறி இருக்கின்றார் ஆனால் நோன்பை கலா செய்கின்ற விடயத்தில் அல்லாஹ் இவ்விருவரையும் பற்றி குறிப்பிடாமல் பிரயானியுடன் கூடுதலாக நோயாளியை இணைத்து கூறுகின்றான் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்
நோயாளியும் பிரயாணியும் நோன்பை விடுவதற்கான காரணம் இருக்கின்றது ஆனால் கர்ப்பிணியும் பாலூட்டும் பெண்ணும் நோன்பை விடுவதற்கான காரணம் அவ்விருவரை போன்ற உடல் நிலை காரணமில்லை
மாறாக பாலூட்டும் தாய் கையில் தவழும் குழந்தையின் ஆரோக்கியத்துக்காவும் கட்பினித்தாய் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்துக்காவும் நோன்பை விடுகின்றனர் அதனால் இவ்விருவருக்கும் பிரயாணியின் சட்டமும் நோயாளியின் சட்டமும் பொருந்தாது
இவ்விருவரும் நோன்பை விடுவார்கள் என்று தெளிவாக ஹதீஸில் உள்ளது ஆனால் இவர்கள் விட்ட நோன்பை கலா செய்ய வேண்டும் என்று நபிகளாரை தொட்டும் எந்த தகவலும் வரவில்லை ஆதாரம் இல்லாமல் இஸ்லாத்தின் பெயரால் சட்டம் இயற்றுவது பெரும் குற்றமாகும்
இன்னும் சில அறிஞ்சர்கள் இவ்வுருவரும் விட்ட நோன்புக்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று கூறுகின்றனர் இந்த முறையில் இப்னு அப்பாஸ் {ரலி} இப்னு உமர் {ரலி} தீர்ப்பு வழங்கி உள்ளார்கள் என்று வாதிடுகின்றனர்
அதற்கு ஆதாரமாக சூரா பகராவின் 184வது வசனத்தை முன்வைக்கின்றார்கள்
""அதற்கு சக்தி பெற்றவர்கள் ஒரு மிஸ்கீனுக்கு உணவளிப்பது பரிகாரமாகும்""
இவ்வாசனம் நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் இருந்த விரும்பியவர் நோன்பு நோற்கலாம் விரும்பியவர் நோன்பை விட்டு விட்டு ஒரு ஏழைக்கு உணவளிக்கலாம் என்ற சட்டத்தை குறிப்பிடும் வசனமாகும் பின்னர் இந்த சட்டம் முழுமையாக மாற்றப்பட்டு விட்டது
இப்னு அப்பாஸ் {ரலி} அவர்கள் இவ்வசனத்தின் அடிப்படையில் தான் இறுதிவரை செயல்பட்டு வந்தார்கள் என்ற தகவல்களை புகாரியில் நாம் பெற்றுக்கொள்ள முடியும் அவர்கள் கூறுகின்றார்கள் இவ்வசனம் முழுமையாக மாற்றப்பட வில்லை வயோதிபார்களும் பாலூட்டும் தாய்மாரும் கட்பினிகளும் ஒரு ஏழைக்கு விடுகின்ற நோன்புக்கு குற்றப்பரிகாரமாக உணவளிக்க வேண்டும் இது இப்னு அப்பாஸ் [ரலி} அவர்களின் சுய விளக்கமாகும்
ஆனால் இப்னு உமர் {ரலி} சலமத் இப்னு அக்வா {ரலி} இன்னும் பல சஹாபாக்கள் கூறுகின்றார்கள் (அதற்கு சக்தி பெற்றவர்கள் ஒரு மிஸ்கீனுக்கு உணவளிப்பது பரிகாரமாகும்) என்ற வசனத்தை சூரா பகராவின் 185வது வசனம் (உங்களில் யார் ரமழான் மாதத்தை அடைகின்றாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்) என்ற வசனம் முழுமையாக மாற்றி விட்டது மாற்றி விட்டது என்று கூறுகின்றார்கள் {புகாரி}
அதாவது யாருக்கு நோன்பு பிடிக்க சக்தி உள்ளதோ அவர் நோன்பு நோர்கதான் வேண்டும் ஆகாரம் வழங்குவது செல்லுபடி அற்றது என்பதை அல்லாஹ் இவ்வசனத்தில் தெளிவு படுத்துகின்றான் ஆனால்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மாத்திரம் மற்ற மூத்த சகஹாபாக்களின் கருத்துக்கு மாற்றமாக நான் மேலே சொன்ன கருத்தில் இருந்துள்ளார்
இப்னு அப்பாஸ் ரலியின் இக்கருத்து இவ்வசனம் இறங்கிய சந்தர்பத்தில் அவர் சிறு பிள்ளையாக இருந்த காரணத்தாலும் இந்த குரான் வசனத்தை நடை முறைபடுத்திய மற்ற மூத்த நபித்தோழர்கள் இவருக்கு மாற்றமாக கூறுவதாலும் ஏற்றுகொள்ள முடியாத கருத்தாகும்
இவ்வாறு உணவளிக்க வேண்டும் என நபி {ஸல்} அவர்கள் நமக்கு வழிகாட்ட வில்லை மாறாக இது அவர்களின் சுய தீர்ப்பாகும் நபித்தோழர்களின் சுய தீர்ப்பு மார்கமாகது என்பதை நாம் அறிந்து வைத்துல்ளோம்
எனவே பாலூட்டும் தாய்மாரும் கர்பிணிகளும் விட்ட நோன்பை கலா செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியதாக தகவல் இல்லாத ஒன்றை நாம் கடமை என்ற அளவுக்கு ஆக்குவது மாபெரும் குற்றமாகும்
அல்லாஹ் மார்கத்தை இலகுவாக்கி வைத்துள்ளான் நாம் அதிலே இல்லாதவைகளை உண்டாக்கி கடினமாக்கி விட முற்பட கூடாது
கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மாருக்கும் இவ்வாறான ஒரு சட்டத்தை நாம் கடமையாக்கினால் அவர்கள் பல சுமைகளுக்கு உள்ளாகுவார்கள்
உதாரணமாக ஒரு பெண் கற்பமானதிளிருந்து பாலூட்டு காலம் வரை மூன்று ரமழான்களின் நோன்பை விடுகின்றாள் என்றுவைத்து கொள்ளுங்கள்
மூன்று வருடங்களின் பின் அவள் மீண்டும் மறு குழந்தைக்கு தயாராகுவால் மீண்டும் கற்பமாவால் மீண்டும் மூன்று வருடத்தின் நோன்பை விட நேரிடும் இவ்வாறே சிலர் விட்டு விட்டு தொடர்ச்சியாக ஐந்து பிள்ளைகள் வரை பெற்றெடுப்பார்கள் இன்னும் சிலர் இதை விட அதிகமான குழந்தைகளை பெற்றெடுப்பார்கள்
இப்பொது சிந்தியுங்கள் சகோதரர்களே விட்ட நோன்பை இவர்கள் கலா செய்ய வேண்டும் என்று நேரடியாக ஆதாரம் இல்லாமல் கடமையாக்கும் போதுஅது எவ்வளவு பெரிய சுமையாகவும் பாரமாகவும் அது மாறிவிடும்?
ஐந்து பிள்ளைகளுக்கு தாயானவள் 15 ரமழான் மாதங்களின் நோன்பை கலா செய்ய வேண்டிய சுமை அவ்வாறே பத்து பில்ழைக்கு தாயானவள் முப்பது மாதங்களின் நோன்பை கலா செய்ய வேண்டிய நிலை ஏற்படும் இவ்வாறு பிள்ளைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கலா நோன்பின் காலங்கள் கூடிக்கொண்டே போகும்
இது மாத்திரமா? தனது கணவனுக்கு செய்ய வேண்டிய காரியங்கள் வேறு மனைவிமாருக்கு இருக்கும் இப்படி எந்த ஆதாரமும் இல்லாத ஒரு சட்டத்தை பெண்கள் மீது சுமத்துகின்றவர்கள் அல்லாஹ்வை பயந்துகொல்லுங்கள்
அலாஹ் கூறுகின்றான்
மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக; உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம்.
{அல் குர்ஆன்5:48}
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை;
ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
{அல் குரான்:33:36}
எனவே அல்லாஹ்வும் அவனது தூதரும் கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மாருக்கும் நோன்பில் வழங்கி இருக்கும் சலுகையை நாமும் வழங்க வேண்டும் அவர்கள் நோன்பு நோற்பது கடமை இல்லை என நபிகளார் தெளிவாகவே கூறி உள்ளார்கள் இதிலே மாற்று கருத்து கூறுவோர் நான் மேலே முன்வைத்த அல் குரானின் வசனத்தை நன்கு படித்து வஹியை மாத்திரம் பின்பற்றி நாளை மறுமையில் வெற்றி பெரும் கூட்டத்தில் சேர முயற்சிக்க வேண்டும்
அல்லாஹ் மிக அறிந்தவன்...
extrected from:http://qsiakponline.blogspot.com/2014/06/blog-post_2998.html?spref=fb

No comments:

Post a Comment

 

FACE BOOK LIKE